  |
|
|
|
|
|
|
 |
|
|
|
|
|
'Sri
Lankan Embassy in Chennai is spying in Tamil Nadu?'
[Kumutham Reporter -
23.03.2008] |
|
|
 |
 |
|
|
வடக்கு _ கிழக்கு இலங்கையில் மட்டும்
வாலாட்டி வரும் இலங்கை அரசு, இப்போது கடல் தாண்டி
தமிழகத்துக்குள்ளும் இடக்குச் செய்ய ஆரம்பித்து விட்டது
போலிருக்கிறது. சென்னையில் உள்ள அந்நாட்டுத் தூதரகம்
வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தைப் பார்க்கும் போது
அப்படித்தான் தோன்றுகிறது.
அந்தப்
புத்தகத்தின் பெயர் ‘தமிழகத்தின் பார்வையில்
விடுதலைப்புலிகள்’ (LTTE in the
eyes of Tamil Nadu). இலங்கை அரசின் வெளியுறவுத்
துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்தப் புத்தகத்தில்,
தமிழகமே புலிகளுக்கு எதிராக இருப்பதைப் போல
காட்டப்பட்டிருக்கிறது. இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழகச்
செய்தித்தாள்களில் வந்த செய்திகளை மட்டும் பொறுப்பாகத்
தேடித் திரட்டி அந்தப் புத்தகம்
தொகுக்கப்பட்டிருக்கிறது. இது தமிழீழ ஆதரவாளர்கள்
மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக¢கிறது.
‘மனிதம்’ என்ற மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின்
செயல் இயக்குனர் ‘அக்னி’ சுப்ரமணியம் என்பவரின் கையில்
இந்தப் புத்தகம் சிக்க, அதை அவர் பா.ம.க. நிறுவனர்
ராமதாஸின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறார். தமிழர்
பாதுகாப்புப்
பேரவை கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,
‘‘தமிழீழத்துக்கு எதிரான இந்தப் புத்தகத்தை இலங்கை அரசு
வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகம் மூலம் தமிழகத்தில்
விஷத்தைப் பரப்பி வரும் சென்னையில் உள்ள இலங்கை துணைத்
தூதரகத்தைத் தடை செய்ய வேண்டும்’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.
‘அக்னி’ சுப்ரமணியத்தை நாம் நேரில் சந்தித்தோம்.
‘‘இலங்கைத் தமிழர்கள் மீது அந்நாட்டு அரசு நடத்தி வரும்
அத்துமீறல்களை வெளிக்கொண்டு வரும் பணியில் கடந்த நான்கு
ஆண்டுகளாக எங்கள் ‘மனிதம்’ அமைப்பு ஈடுபட்டுள்ளது.
நேர்முகப் போருடன் ஒரு கருத்தியல் போரையும்
நடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் புத்தகத்தை
இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த ஆங்கிலப் புத்தகத்தில், கடந்த ஆண்டு ஜனவரி முதல்
டிசம்பர் வரை தமிழக ஊடகங்களில் வெளிவந்த இலங்கை
அரசுக்கு ஆதரவான செய்திகளை மட்டும் ஒருதலைப்பட்சமாகத்
தொகுத்துத் தந்திருக்கிறார்கள். இருநூற்று இருபது
பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகம் உயர்தர காகிதத்தில்,
உயர்ந்த தரத்தில்
தயாரிக்கப்பட்டுள்ளது.
புத்தகத் தலைப்பில் விடுதலைப்புலிகள் என்று
குறிப்பிட்டிருந்தாலும் அதில் முழுக்க முழுக்க, ஈழத்
தமிழர்களுக்கு எதிரான கருத்துகளே அதிகமாக இருக்கின்றன.
செய்தித்தாள்களில் வந்த தலையங்கப்பகுதிகள், ஆங்கிலப்
பத்திரிகைகளில் வந்த செய்திகள், தமிழ்ப் பத்திரிகைகளில்
வந்த பேட்டி மற்றும் செய்திகள் என மூன்று பகுதிகளாகப்
புத்தகம் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பக்கத்தில் உள்ள
நூல் அறிமுகப் பகுதியில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி,
அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரமான
கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
அந்தப் புத்தகத்தை சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம்,
இங்கே ஈழத் தமிழர்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி
வரும் செய்தியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
தூதரகத்தில் உள்ள எங்கள் நண்பர்கள் மூலம் இந்தப்
புத்தகம்
எனக்குக கிடைத்தது. அதைப் படித்துப்
பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இந்தப் புத்தகத்தைப்
பார்த்த ராமதாஸ், திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர்
கொதித்துப் போயிருக்கிறார்கள். ஒரே ஒரு புத்தகம்
மட்டுமே
எங்களுக்கு கிடைத்துள்ளதால், ஒவ்வொருவராக
அதைப் படித்து வருகிறோம்.
இந்தப் புத்தகத்தின் விலை மதிப்பு என்னவாக இருக்கும்
என்று ஒரு பிரபல பதிப்பகத்தில் விசாரித்தபோது அவர்கள்,
‘விலை உயர்ந்த காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ள இந்தப்
புத்தகத்தைத் தயாரிக்க தலா ஆயிரம் ரூபாய் வரை
செலவாகியிருக்கும்’ என்றனர். இவ்வளவு விலை உயர்ந்த
புத்தகத்தை இலங்கைத் தூதரகம் இலவசமாக வழங்க வேண்டிய
அவசியம் என்ன?
உண்மையிலேயே தமிழக ஊடகங்களின் பார்வையில் தமிழ்
ஈழப்பிரச்னையை விவரிப்பதாக இருந்தால் இருதரப்புச்
செய்திகளையும் தொகுத்திருக்க வேண்டும். அப்படியின்றி,
இலங்கை அரசுக்கு ஆதரவாக வெளியான செய்திகளை மட்டும்
இவர்கள் தொகுத்திருப்பது அநியாயமானது. தமிழ்ஈழ
மக்களுக்கு எதிரான அந்தச் செய்திகளைப்
பத்திரிகைகளுக்குக் கொடுத்ததே சென்னையில் உள்ள
அந்நாட்டின் துணைத் தூதரகம் தான். இதற்காக இங்குள்ள
சில செய்தியாளர்களுக்கு தங்கச்சங்கிலி,
பணப்பரிசுகளையும் அது வழங்கியிருக்கிறது.
இலங்கை அரசு தரும் இந்த வெகுமதிகளில் மஞ்சள் குளிக்கும்
சில ஊடகங்கள்தான், இப்படி தமிழர்களுக்கு எதிரான
செய்திகளைப் பிரசுரிக்கின்றன. அதை மீண்டும் தொகுத்து
இலங்கை அரசே புத்தகம் வெளியிட்டிருப்பது வேடிக்கையானது.
தமிழகத்தில் தமிழர்கள் மூலமாகவே ஈழத்தமிழர்களுக்கு
எதிரான செய்திகளைப் பரப்பும் தந்திரத்தை தூதரகம்
செய்கிறது’’ என்றார் அக்னி சுப்ரமணியம்.
‘சரி! அதற்காக இலங்கைத் தூதரகமே சென்னையில் இருக்கககூடாது
என்று சொல்வது நியாயமா?’ என்று அவரிடம் கேட்டோம்.
‘‘செய்தியாளர்களை மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள சில
மீனவத் தலைவர்களையும் இங்குள்ள இலங்கைத் தூதரகம் தனது
கட்டுப்பாட்டில் வைத்திருககிறது. அவர்கள் தங்களுக்கு
எதிரான கோஷ்டியினர், கடலில் மீன் பிடிக்கச்
செல்லும்போது அதுபற்றிய தகவல்களை இலங்கைத் தூதரக
அதிகாரிகளுக்குத் தருகின்றனர். அந்தத் தகவலை வைத்து
அந்த மீனவர்கள் மீது இலங்கைக கடற்படை, தாக்குதல்
நடத்துகிறது. அதாவது தூதரகப் பணியை விடுத்து, இலங்கைத்
தூதரகம் இங்கே உளவுப் பணியைச் செய்து வருகிறது
அதுமட்டுமல்ல, சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தில்
எங்களுக்குச் சில ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள் மூலம்
ஒரு புதிய தகவலும் எங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்களான திரைப்பட
இயககுநர்கள் தங்கர்பச்சான், சீமான், புகழேந்தி,
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போன்ற பலரது
செல்போன் எண்கள், வீடு, அலுவலக முகவரி, தொலைபேசி எண்களை
தூதரகம் சேகரித்து வைத்திருக்கிறது என்பதுதான் அந்தத்
தகவல். இலங்கைத் தூதரகம் அப்படிச்செய்ய என்ன அவசியம்?
ஒருவேளை இந்தத் தலைவர்களது செல்போன் பேச்சுகளை
ஒட்டு கேட்கத்தான் இப்படிச் செய்திருக்கிறதோ? என்ற சந்தேகமும்
எங்களுக்கு உண்டு. குறிப்பாக சென்னையில் துணைத் தூதரக
அதிகாரி ஹம்சாதான் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு
வருகிறார்.
இந்தியாவில் இலங்கை தொடர்பான பிரச்னைகளைக் கவனித்துக்
கொள்ள டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரகமே போதும். இந்த
நிலையில், சென்னையில் எதற்குத் தனியாக ஒரு துணைத்
தூதரகம்? இங்கே உளவு பார்ப்பதற்கா?
சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை உடனடியாக மூட தமிழக
அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு வெளியிட்டுள்ள அந்த சர்ச்சைககுரிய
புத்தகத்தில் தமிழர்களுக்கு எதிரான செய்திகள்
மட்டுமின்றி, தமிழக அரசுக்கு எதிரான செய்திகளும் உள்ளன.
அதுபற்றி தகவலறிந்த தமிழக செய்திப் பிரிவு, அந்தப்
புத்தகத்தை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளதாக
எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன’’ என்றவர் சற்று
நேர இடைவெளிக்குப் பின்,
‘‘இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் தினமும்
ஆறில் இருந்து ஏழு தமிழர்கள் காணாமல் போய்க்கொண்டிருககிறார்கள்.
அதுபற்றி விசாரிககச் சென்ற நெதர்லாந்தில் உள்ள
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதியும், இந்தியாவின்
முன்னாள் தலைமை நீதிபதியுமான
P.N.பகவதி மற்றும் அவரது
குழுவை, இலங்கை அரசு அவமதிப்புச் செய்து திருப்பி
அனுப்பியுள்ளது. தமிழர்கள் மர்மமான முறையில் காணாமல்
போவது குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்புககுழு
இருநூற்று நாற்பத்து மூன்று பக்கம் கொண்ட அறிககையை
அந்நாட்டு அரசுக்கு எதிராக வெளியிட்டுள்ளது.
கொழும்பில் மட்டும் நூறு தமிழர்கள் அண்மையில் காணாமல்
போனார்கள். அவர்கள் உயிருடன் இருககிறார்களா? இல்லையா?
என்றே தெரியவில்லை. பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள்,
பன்னாட்டு ஊடகங்கள் ஆகியவை இலங்கையில் சர்ச்சைக்குரிய
பகுதிகளில் நுழைய மகிந்தா ராஜபகசே அரசு தடை
விதித்துள்ளது. தமிழர்கள் வாழும் கிளிநொச்சிப்
பகுதிக்கு உணவுப் பொருட்களை அனுப்ப அந்நாட்டு அரசு
மறுத்து வருகிறது. அன்றாடம் நூற்றுகணககான தமிழர்கள்
அங்கே செத்துமடிந்து கொண்டிருக்கிறார்கள். விலைவாசி
வேறு விஷம்போல் ஏறி அந்நாட்டு மக்கள் தவியாய்த்
தவிக்கிறார்கள்.
அப்படியிருக்க, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை
ஆயிரககணக்கில் இலங்கை அரசு தயாரித்து அதுவும் இலவசமாக
தமிழர்களுக்கே தருவது அந்நாட்டு அரசின் போர்த் தந்திரம்
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?’’ என்று கேள்வி
எழுப்பி முடித்துக¢ கொண்டார் அக்னி சுப்ரமணியம்.
படங்கள் : மீடியா ராமு, கென்னடி - வே. வெற்றிவேல்
URL :
http://www.kumudam.com/magazine/Reporter/2008-03-23/pg4.php
|
|
|
|
Close down
Sri Lankan Consulate in Chennai : It indulges in
unlawful intelligence gathering and false propaganda
- Agni Subramaniam
Accusing the Sri Lankan Consulate in Chennai of
false propaganda, unlawful intelligence gathering
and tipping off exercises, Agni Subramaniam, the
Executive Director of Chennai based Manitham Human Rights
Organization is requesting the authorities to close
down this Consulate. He has made several accusations
against this Consulate in an interview to Kumudam
Reporter,
the well known Tamil weekly magazine from Tamilnadu.
The English translation of this week's (23 03 2008)
Kumudam Reporter article is as follows:
It appears that the Lankan government, which causes
chaotic situations in the north - east of Sri Lanka,
has now ventured to cross the seas and cause
mischief and chaos in Tamil Nadu.
This is the impression that is created by a book
published by the Sri Lankan Consulate in Chennai.
"LTTE in the eyes of Tamil Nadu" is the title of the
book. In this book, published by the Lanka Foreign
Ministry, it is portrayed as though the Tamil Nadu
were against the Tigers. The book is a collection of
news stories that appeared in favour of Sri Lanka in
the Tamil Nadu media. This book has created a stir
among the supporters of Tamil Eelam in Tamil Nadu.
Having laid his hands on this book, Agni Subramaniam,
the Executive Director of Manitham Human Rights
Organization, brought the matter to the notice of
Dr.Ramadas, the Leader of Pattalli Makkal Katchie.
The angered Ramadas, addressing in a discussion
of Tamil Pathukkappu Peravai, charged that the Lankan Government has
published this book to inject venom into Tamil Nadu
politics and demanded that the Lankan Embassy in
Tamil Nadu be closed down.
In an interview, Agni Subramainam told that the
Manitham Human Rights Organization has been engaged
for the last 4 years in exposing the excesses
committed on Lankan Tamils by their government. The
Sri Lankan Government has published this book to
launch a conceptual war, while perpetrating military
onslaughts in their country.
He continued in the following words:-
This book containing 220 high quality pages is a
collection of selected news stories that appeared in
favor of Sri Lanka in the Tamil Nadu media between
January and December last year.
Although the title of the book refers to the LTTE,
most of the views are totally against the Lankan
Tamils. The book has three sections - Editorial,
news in the English media and the interviews that
appeared in the Tamilnadu news papers.
The introductory page carries views expressed
against the Tamil people with focus on LTTE.
Sri Lankan Consulate in Chennai distributes the
books free to the journalists, who carry propaganda
against the Eelam Tamils.
I got a copy from a friend in the Embassy. I was
shocked to read the stories.
Ramadas, Thirumavalan and Seeman are angered over
this book. Since we have received only one book, we
are reading it one by one.
According to a publisher, the cost of each copy of
the book would be more than Rs 1000, since it has a
higher printing paper and quality. What is the ultimate motive
of distributing this book free of charge?
If the purpose had been to portray the views of the
Tamil Nadu media on the Lankan Tamil issue, the
views of both sides should have been published
impartially. But it is unjust to have compiled the
views favourable only to the Sri Lankan government
and prejudicial to the other.
It was the Sri Lankan Consulate in Chennai that
provided such stories to the Tamil Nadu journalists.
It was this Sri Lankan Consulate in Chennai that
gifted gold chains and cash to certain journalists
here. It is these media men who revel over these
gifts, plant such biased news against the Lankan
Tamils leaked to them by the Sri Lankan Consulate in
Chennai.
Thereafter, it is the same Consulate that compiles
the news stories that are not impartial. This is
nothing but a mockery. Sri Lankan Consulate in
Chennai makes use of Tamils of Tamil Nadu to write
against Lankan Tamils to carry out a designed
propaganda against Lankan Tamils - thus states Agni
Subramaniam.
We posed him the question whether we can demand the
closure of the Sri Lankan Consulate in Chennai
merely for this reason. His response to this
question is given below:-
It is not only the journalists that they influence.
They have certain leaders of the Tamilnadu fishing
community under their undue influence. These
selected fishermen pass certain information
regarding their fellow fishermen whom they dislike,
to Sri Lankan Consulate in Chennai, which in turn
tips off to the Lankan Navy so that the Navy can
intercept those fishermen and attack them.
Instead of engaging in legitimate functions of an
Embassy, it indulges in intelligence gathering and
in tipping off exercises.
Further more, we have reliable information that the
Consulate has collected the cell phone numbers,
residential addresses, official addresses etc of
persons such as film directors Thangagpachan, Seeman,
Pugalaenthy, Thirumavalavan (Leader of Viduthalai
Siruthaikal) and others who are supporters of Tamil
Eelam.
What is the need for this exercise? Is it to tap the
telephones of these persons? It is the Head of the
Sri Lankan Consulate in Chennai, Hammsa, who is
indulging in such excesses.
The embassy in Delhi is adequate enough to handle
its affairs. Why should there be a Sri Lankan
Consulate in Chennai? Is it for intelligence
gathering?
The Tamil Nadu government and the central government
must take steps to close down the Sri Lankan
Consulate in Chennai.
Besides carrying news against the Lankan Tamils, the
book contains stories that are prejudicial to the
interests of the Tamil Nadu government.
It is learnt that having come to know about this,
Tamil Nadu News Division has acquired a copy of this
book and has begun investigations in to the matter.
About 6 to 7 Tamils disappear daily in Jaffna alone.
The government of Sri Lanka has treated a
Netherland based International Criminal Court
Judge and former Justice of India, Mr. P.N.Bagwathy, who
went to investigate into the disappearances in a
derogatory manner. Human Rights Watch has published
a 243 paged document against the Lankan government
regarding the mysterious disappearances of Tamils.
In Colombo alone, 100 Tamils disappeared recently.
One does not know whether they are dead or alive.
Mahinda's government has refused permission for
international NGOs and international journalists to
visit areas under dispute.
The Lankan government refuses permission to dispatch
food items to Killinochchi, where Tamil people live.
100's of Tamils die. Price hike is unbearable. In
such a context, should we not infer the free issue
of such a costly publication as a war strategy!"
concluded Agni Subramaniam.
[Article Courtesy : Kumudam Reporter / Transalation
by :
www.Tamilinsight.org] |
|
Follow-Up Actions :
-
Ramdoss and Thirumavazhavan demanded to close down
Sri Lankan Consulate in Chennai
- In Tamil [TIS / 27.03.2008]
|
|
|
RELATED NEWS :
|
|
-
TOP |
|
|
|
|
 |
|
|
|
|
|
|
|
 |
|
Manitham is aiming to
bring radical changes in the society to enable individuals and
communities to become self-reliant so that people may live in
consonance with the true dictates of humanity in its widest scope
and dimension. |
|
|
|