|
|
|
MATHIPPU [DIGNITY] – A magazine dedicated to
Human Rights & Environment
|
|
|
|
MAY,2007 Issue
[Pages 2 TO 3] |
Free
page for MATHIPPU Viewer |
|
|
|
|
|
|
|
தலையங்கம்
|
எனை
ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்
திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால்,
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்.'
பாரதிதாசனின் பாடல் வரிகள் இவை. தாய்க்கும், தந்தைக்கும் ஒப்பானவர்களாய்
கருதப்படுவது, நாம் பிறந்த இனம், மண், மொழி, கடல், மலை...
இவையெல்லாம் இன்று தமிழனுக்கு சொந்தமா என்ற மிகப் பெரிய கேள்வி நம்
மக்களுக்குள்ளே தோன்ற ஆரம்பித்து விட்டது. ஏனெனில்,
-
தமிழ் செம்மொழி குழு மட்டும் அமைக்கப்பட்ட
நிலை.
சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்ற
தமிழக அரசின் கோரிக்கையை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று தரவேண்டிய
நடுவண் அரசு, கோரிக்கையையே ஏற்க மறுத்துவிட்டது.
ஆரம்பப் பள்ளியில் தமிழ் கட்டாயம் என அரசு கொண்டு வருவதை, சென்னை உயர்நீதி
மன்றம் தடை விதிக்கிறது. மொழி உரிமை கேள்விக்குறியானது.
-
1956ல் மொழிவாரியாக மாநிலங்களை
பிரிக்கப்பட்ட பொழுதே, தமிழகம் சார்ந்த நிலப்பரப்புகள் அண்டை
மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. அன்றே மண்ணுரிமையும் பறிபோனது.
-
1974ல் கச்சத்தீவு சிங்கள தேசமான இலங்கைக்கு
தமிழகத்து மக்களின் அனுமதியின்றி இலவசமாய் அன்றைய மைய அரசால்
கொடுக்கப்பட்டது. இதனால் நம் கடல் எல்லையும் சுருங்கிப்போய், கடல் எல்லை
உரிமையும் கைகழுவப்பட்டது.
-
காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு ஆகிய
ஆறுகளின் கட்டுப்பாடு நம் கைகளில் இல்லை. இதுகுறித்து இந்திய நடுவண்
அரசும் சரி அல்லது உச்சநீதி மன்றங்களின் தீர்ப்புகளை நடைமுறைபடுத்த
வேண்டிய மாநிலங்களும் சரி, தீர்ப்பை குப்பை தொட்டியில் போட்டுவிட்டனர்.
ஆற்று உரிமையும் பறிபோகிறது.
-
மலைகளின் இராணி என வர்ணிக்கப்படும் நீலகிரி
மலைத் தொடரிலுள்ள பகுதியான கூடலூரும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பல
பகுதிகளும் அண்டை மாநிலத்தாரின் ஆக்கரமிப்பிற்குள்ளாகியுள்ளது. மலையின்
உரிமையும் பறிக்கப்பட்டது.
-
விவசாயம் தண்ணீரின்றி வறண்ட பகுதியாக
அறிவிக்கப்பட வேண்டிய சூழல். 80 சதவிகித விவசாய நிலப்பகுதி காவேரி, பாலாறு,
முல்லை பெரியார் ஆறுகளையே தமிழகம் நம்பியுள்ளது. உலகுக்கு நெல் அளந்த
தஞ்சை தரணி விவசாயிகள், இன்று இறக்குமதியை எதிர்நோக்க வேண்டிய
கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்ற நிலை. தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதி மன்றம்
கொடுத்த உத்திரவின்படி நடைமுறைப்படுத்தப்பட அண்டை மாநிலங்கள் மறுக்கின்றன.
இதன்படி விவசாய உரிமையும் கனாக் காணக்கூடிய நிலை.
-
1983 முதல் சுமார் 300 தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படையினரால் குருவி சுடுவதைப்போல் சுடப்பட்டு பலியாகினர். பல
ஆயிரம் மீனவர்கள் ஊனமடைந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை அரசிடமிருந்து ஒரு பைசா நட்ட ஈடுகூட
கொடுக்கப்படவில்லை. நம்முடைய அரசுகளும் இதுகுறித்து இலங்கையிடம் கோரவில்லை.
நமது அப்பாவி மீனவர்களும் இப்படி ஒரு வழி இருக்கிறது என்பதே தெரியாமல்
உள்ளார்கள். மீன்பிடி உரிமையும் நழுவியது.
-
உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக தமிழகத்தில்
மட்டும் 50 லட்சம் சில்லறை வணிகர்கள் முற்று முழுதாய் பாதிக்கப்படுவார்கள்.
டங்கல் திட்டம், காட் ஒப்பந்தம், உலக வங்கியால் 12 ஆண்டுகளுக்கு முன்னரே
உலகமயமாக்கல் பற்றிய திட்டம் வகுக்கப்பட்டு, நமது இந்திய அரசும் ஒப்புதல்
கொடுத்து கையப்பமிட்டுள்ளது. உலகமயமாக்கலின் ஒட்டுமொத்த பாதிப்பு வரும்
முன்பே, இந்திய அரசு கையெழுத்திட்டதை திரும்பப் பெறுமாறு வலியுறுத்துவது
ஒன்றே, நம் வணிகர்களை பாதிப்பிலிருந்து விடுபட வழி வகுக்கும்
நிலையாயுள்ளது. சிறு வணிகர்களின் உரிமையிலும் கை வைக்கப்பட்டுள்ளது.
-
சிறப்பு பொருளாதார மண்டலம், நில உரிமைக்கு
விழுந்த பலத்த அடி. சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விளை நிலங்களை
கையகப்படுத்தி விவசாயத்தை அழிக்கும் முயற்சி நடைபெறுவது வேதனைக்குரியது.
தனிமனித நில உரிமை மண்ணாகிப்போகிறது.
-
இட ஒதுக்கீட்டின் மூலம் சமுதாய சமச்சீர்
நிலை உருவாக்குவதே எண்ணம். 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு உயர்கல்வி
நிலைகுலைய செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராய், தமிழகம், ஒரு
முழு நாள் அடைப்பை கடைப்பிடித்தது. மைய அரசின் விண்ணப்பமும் தற்போது
உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகிறது.
-
அண்மையில் உச்ச நீதி மன்றத்தின் ஒன்பது பேர்
அடங்கிய பேராயம் ‘ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்படும் சட்டங்களும், பிற
வகையார்களும் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டவையே’ என்ற மற்றொரு
தீர்ப்பு. ஏற்றத்தாழ்வான இந்திய சமூகத்தில் அக்கறையுள்ள எல்லோரிடத்திலும்
ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமநிலை சமுதாய உரிமை கேள்விக்குள்ளாகியுள்ளது.
-
இசுலாமியர்கள் சமூக, பொருளாதார, கல்வி
நிலைகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை நீதிபதி இராசேந்திர
சச்சாரின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழக அரசு சிறுபான்மையினருக்கு
தனி இட ஒதுக்கீடு அறிவித்துள்ளது, ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆனால்,
சிறுபான்மையினருக்குரிய தனி இட ஒதுக்கீடு, 69 சதவிகித ஒதுக்கீடு தொடர்பான
உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்கு பின்தான் நடைமுறைப்படுத்தப்படும்
என்பது சகிக்க முடியாத அவமதிப்பு, ஏமாற்றம். சிறுபான்மையினரின் உரிமையும்
முற்றுபெறாமலுள்ளது.
-
கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப்பெரிய 6
வி.வி.இ.ஆர். & 1000 என்ற வகை அணு உலைகளுக்கான கட்டுமானப் பணி மிக வேகமாய்
நடைபெறுகிறது. இந்த உலைகளின் மூலம் கிடைக்கும் 6000 மெகாவாட் மின்சாரம்,
தமிழகத்திற்கு 3000 மெகா வாட் அளிக்கப்படும். தமிழகத்தின் மொத்த மின் தேவை
8500 மெகாவாட். தற்பொழுதே 10,098 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது
என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. உலகம் முழுக்கவுள்ள மனித
உரிமையாளர்கள் மற்றும் சுற்றுச்சூழவியலாளர்கள் அணுஉலையை எதிர்க்கின்றனர்.
அணு உலையின் மூலம், அணு மின் உற்பத்தி செய்யும் பொழுது அந்த நிலையத்தின்
வெப்பத்தை தணிக்க நாள் ஒன்றுக்கு 4320 கோடி மீட்டர் கடல் நீர்
உறிஞ்சப்படும். தண்ணீரை உறியும் பொழுது, கடல்வாழ் உயிரினங்கள் சிக்காமல்
இருக்க கனிம, வேதி பொருள்கள் கடலில் தூவப்படும். மற்றும், வெப்பநீர்
திரும்பவும் கடலுக்குள் செலுத்தப்படுவதால், அங்கு வாழும் கடல்வாழ்
உயிரிகள் அடியோடு அழிந்து போகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால்
கூடங்குளத்தின் அருகேயுள்ள மூன்று மாவட்ட மீனவர்கள் வாழ் நிலை
கேள்விக்குள்ளாக்கப்படும். அதோடு அணு உற்பத்தியின் போது வெளியேறும் அணு
கழிவுகளை எப்படி அப்புறப்படுத்தப் போகிறார்கள் என்பதும் ஒரு முக்கிய
கேள்வி. சூழல் உரிமையையும் பறிகொடுக்கக்கூடிய கட்டாயத்திற்கு நாம்
அனைவரும் தள்ளப்படுகிறோம்.
அனைத்து உரிமைகளையும் விட்டு விட்டு நாம்
நம்முடைய வருங்கால சந்ததிக்கு அடிமை பதவியைத்தான் பரிசாக கொடுத்துவிட்டு
போகப் போகிறோம். |
|
|
|
|
| | |
|
 |
|
Manitham is aiming to bring radical changes in the society to enable
individuals and communities to become self-reliant so that people may live in
consonance with the true dictates of humanity in its widest scope and
dimension. |
|