|
'HUMAN RIGHTS
VIOLATIONS AND THE POLICE ENCOUNTERS'
காவல்துறை மோதல் கொலைகளும், மனித உரிமை மீறல்களும
------------------------------------------------------------------
கடந்த சில வருடங்களாய் தமிழகத்தில் என்றும் இல்லாத
அளவுக்கு காவல்துறையினரால் மோதல் கொலைகள்
நடத்தப்பட்டு வருகின்றன. தி.மு.க பதவியேற்று ஒரு
வருடம்கூட ஆகாத நிலையில் ஏறக்குறைய ஏழு மோதல் கொலைகள்
நடந்துவிட்டன. இம்மோதல் கொலைகள் ஆட்சிப்பேதமின்றி
தொடர்கதையாய் இருந்து வருகிறது. இதை காணும்பொழுது,
தமிழகத்தில் நீதித்துறை தேவையின் மீது தொடுக்கப்படட
ஒரு சவாலாகவே பொதுமக்கள் நினைக்க உந்தப்படுகின்றனர்.
அதோடு மட்டுமல்லாது, நடைபெறும் மோதல் கொலைகள்
உண்மைதானா என்ற சந்தேகம் எல்லா தரப்பினரிடமிருந்து
உருவாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற "மணல்மேடு" சங்கரின்
மோதலும்-கொலையும் போலியானவை தானா என
எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில், சங்கர் கைது
செய்யப்பட்டு விசாரணைக் கைதியாய் இருக்கும் சமயம்,
உள்@ர் மாவட்ட நீதிமன்றங்களிலும், சென்னை
உயர்நீதிமன்றத்திலும் கடந்த 11.08.2005
W.P.No.
26011/2005 வழக்கு போடப்பட்டது. இவ்வழக்கை
20.07.2006-ல், நாகப்பட்டினம் காவல்துறையினர்
மிரட்டல் விடுத்ததால் தமிழக காவல்துறை கொல்ல
முயல்வதாக சங்கரின் தாயார் தொடர்ந்தார். இதுபோன்று
சங்கரின் தாயார், திருமதி. பூபதி நீதிமன்றத்தை
அணுகுகியதால் 25.11.2006-ல் மயிலாடுதுறை மாவட்ட
காவல்துறையினர் ஆயுதம் வைத்திருப்பதாக பொய் வழக்கில்
கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் மணல்மேடு கிளாய்
பஞ்சாயத்து தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணி
செய்யும் மணல்மேடு சங்கரின் தாயார் பூபதி அவர்களுக்கே
காவல்துறையினர் இந்தளவுக்கு கொடுமையை இழைத்து
வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில்
W.P.No.
26011/2005, நாள் : 02.12.2006-ல் வழக்கு தொடர்ந்து
தனது மகனை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது தப்ப
முயன்றதாக கொன்றுவிட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளது
குறித்து தொடர்ந்த வழக்கில் காவல்துறையினர் தகுந்த
பாதுகாப்புதர உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு
அறிவுறுத்தியது.
நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ள தயாராக
இருக்கும் சங்கரை மோதல் என்ற பெயரில் கொலை செய்யும்
நோக்கத்தை கைவிட 07.12.2006 கடலூர், 12.12.2006 கரூர்,
இறுதியாக 18.12.2006-ல் சென்னையில் 24 தலித்
அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளும்
ஒருங்கிணைந்து நீதிமன்றத் தீர்ப்பை
ஏற்றுக்கொள்வதாகவும், மோதல் கொலை திட்டத்தை கைவிட்டு
மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்தவும் தமிழக
காவல்துறைத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து
விளக்கம் கொடுக்கப்பட்டது. அவரும் மோதல் கொலை
நடக்காது என உத்திரவாதம் கொடுத்தார். இந்நிலையில்
கடந்த 05.02.2007 அன்று மயிலாடுதுறை மற்றும்
கும்பகோணம் நீதிமன்றத்திற்கு மணல்மேடு சங்கர்
வந்துவிட்டு சிறைக்கு திரும்பும் போது காவல் துறை
வாகனம் விபத்துக்குள்ளானதாகவும், அப்போது காவலர்களை
தாக்கிவிட்டு தப்பமுயன்றபோது சுட்டதாகவும் காவல்துறை
தெரிவித்துள்ளனர். சங்கர் மோதல் கொலை
செய்யப்பட்டவுடன், முறைப்படி அவரின்
குடும்பத்தாருக்கு காவல்துறையால் தகவல்கூட
அளிக்கப்படவில்லை.
சங்கரின் இறுதிச் சடங்கிலும் ஏகப்பட்ட நெருக்கடிகள்
காவல்துறையால் கொடுக்கப்பட்டது. 13.02.2007
புதுக்கோட்டை
RTO விசாரணைக்கு அழைப்பு
விடுக்கப்பட்டதால் மணல்மேடு கிளாய் கிராம மக்கள்
அன்று அதிகாலை 5.00 மணியளவில்
RTO விசாரணைக்கு
தயாரான அவ்வூர் மக்களை மணல்மேடு காவல்துறை உதவி
ஆய்வாளர் திரு. செந்தில்குமார் மற்றும் தஞ்சாவூர்
உதவி ஆய்வாளர் திரு. சேதுமணி மாதவன் உடன் சுமார் 40
காவல்துறையினர் அவ்வூரினுள் புகுந்து சாதியை இழிவாக
சொல்லி... பயல்களுக்கு
RTO விசாரணை கேட்கிறதா? என
மக்களை, குறிப்பாக பெண்களை மருத்துவமனையில்
சேர்க்கும் அளவிற்கு அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
சனநாயகத்தின் அடிப்படையில் சுனுழு விசாரணைக்குகூட
போகக்கூடாது என மிரட்டுவது, தாக்குவது எந்த வகையில்
நியாயம். சங்கரின் கொலை குறித்து மேற்கொண்டு
சட்டரீதியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் தடுக்கவே
இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கரின்
நெருங்கன உறவினர்களை மிரட்டுவதும், பொய் வழக்கில்
சிறையில் அடைத்தும் வருகின்றனர்.
-
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற காவல்துறை மோதல் கொலைகள்
உண்மையானவைதானா என விசாரிக்க அரசு சார்பற்ற ஒரு
சுதந்திரமான அமைப்பை ஏற்படுத்தி விசாரணை செய்து
அறிக்கை கொடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை
வைக்கிறோம்.
-
மணல்மேடு கிளாய் மற்றும் சுற்றுவட்டார காலணி தலித்
மக்களை சங்கர் மோதல் கொலை செய்யப்பட்ட நாளிலிருந்து
தினமும் இரவில் விசாரணை என்ற பெயரில் மிரட்டுவதும்,
அடித்து துன்புறுத்தியும் காவல்துறையினரும், ஆதிக்க
சாதி வகுப்பினரும் ஒன்றுசேர்ந்து மனித உரிமை மீறல்
செய்து வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளை தேசிய
மனித உரிமை ஆணையமும், தேசிய
SC/ST ஆணையமும்,
தமிழக அரசும் தலையிட்டு தடுத்து நிறுத்திடவேண்டும்.
-
மணல்மேடு சங்கரின் மோதல் கொலை குறித்து
உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் சொல்லியிருப்பது போலவே,
தற்போது காவல்துறையினர் மோதல் கொலை செய்திருப்பதால்
"சூயோ மோட்டோ"
[Suo Motu] என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம்
தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாராணை
நடத்த வேண்டும்.
-
தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மோதல்
கொலையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிவு
செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் வழக்கு முடியும்
வரை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை இடைக்கால
பணிநீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை
எடுக்கவேண்டும்.
Ref : 2/PR/2007 Dated : 23-02-2007
|